11 மாநிலங்களில் வேகமாக பரவும் புது வகை டெங்கு - மத்திய அரசு எச்சரிக்கை

ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (15:06 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தற்போது புதிதாக டெங்கு காய்ச்சல் பரவி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் புதிய வகை டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சொரோடைப் என்ற புதிய வகை டெங்கு காய்ச்சல் தமிழகம் கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அதிக அளவில் பரவி வருவதாகவும் இதனால் இந்த காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
ஒரு பக்கம் கொரோனா வைரஸ் இன்னொரு பக்கம் டெங்கு வைரஸ் என பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்