மாசடைந்த நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு முதலிடம்

ஞாயிறு, 27 செப்டம்பர் 2015 (18:46 IST)
அதிகளவு காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 

 
தெற்காசிய நாடுகளின் நகர்மயமாக்கல் குறித்த ஆய்வு ஒன்றை உலக வங்கி நடத்தியது. அந்த ஆய்வில் மொத்தம் 381 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. காற்று மாசுபாட்டினால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள 20 நகரங்களில் 19 நகரங்கள் தெற்காசியாவில் இருக்கிறது.
 
அதிலும் குறிப்பாக முதல் பத்து இடங்களில் 6 இடங்களை இந்திய நகரங்கள் பிடித்திருக்கிறது. புதுதில்லி முதலிடமும், பாட்னா இரண்டாமிடமும், குவாலியர் மூன்றாமிடமும் மற்றும் ராய்பூர் கராச்சி, பெஷாவர், ராவல்பிண்டி, கோரமாபாத், அஹமதாபாத், லக்னோ என்ற வரிசையில் இடம் பெற்றிருக்கின்றன.
 
வாகனங்கள் வெளியிடும் புகை, படிம எரிபொருட்களை எரிக்கும் தொழிற்சாலைகளே காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. அதிக காற்று மாசுபாட்டால் இந்நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், சுவாசக்கோளாறு, இருதய கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்