ஏழைகளுக்கு சிகிச்சை மறுப்பு - பிரபல ஹாஸ்பிலுக்கு ரூ.600 கோடி அபராதம்

ஞாயிறு, 12 ஜூன் 2016 (22:02 IST)
ஏழைகளுக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்க மறுத்த பிரபல தனியார்  மருத்துவமனைகளுக்கு டெல்லி அரசு ரூ. 600 கோடி அபராதம் விதித்துள்ளது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
ஏழைகளுக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்க மறுத்ததாக குற்றச்சாட்டில் சிக்கிய 5 தனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி அரசு ரூபாய் 600 கோடி அபராதம் விதித்துள்ளது.
 
டெல்லியில், மானிய விலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
 
இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் இடத்தில் கட்டப்படும் மருத்துவமனைகளில் 10 சதவீத நோயாளிகளுக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சட்டம் போடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், டெல்லியில் ஏழைகளுக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்க மறுத்ததாக குற்றச்சாட்டில் சிக்கிய 5 தனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி அரசு ரூபாய் 600 கோடி அபராதம் விதித்துள்ளது.  

வெப்துனியாவைப் படிக்கவும்