”எனது வியூகம் தவறாகிவிட்டது”.. சரண்டர் ஆன அமித் ஷா!

Arun Prasath

வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (08:53 IST)
டெல்லி தேர்தலில் எனது வியூகம் தவறாகிவிட்டது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. பாஜக 8 இடங்களையே கைப்பற்றமுடிந்தது. காங்கிரஸ் ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியவில்லை.

இந்நிலையில் இத்தோல்வி குறித்து தொலைக்காட்சி உரையாடல் ஒன்றில் கலந்துக்கொண்ட அமித் ஷா, “தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்களை பார்த்து சுட்டுக்கொல்ல வேண்டும் என பாஜக தலைவர்கள் பேசி இருக்கக்கூடாது” என கூறினார்.

மேலும், “டெல்லி தேர்தலில் எனது வியூகம் தவறாகிவிட்டது” எனவும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்