புத்தாண்டு கொண்டாட்டத்தில் மேலும் ஒரு விபத்து: 3 மாணவிகள் கவலைக்கிடம்!

செவ்வாய், 3 ஜனவரி 2023 (17:52 IST)
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மேலும் ஒரு விபத்து: 3 மாணவிகள் கவலைக்கிடம்!
டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த 20 வயது இளம்பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகி 12 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் புத்தாண்டு தினத்தில் நடந்த இன்னொரு விபத்தில் 3 மாணவிகள் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
கிரேட்டர் நொய்டா என்றா பகுதியில் பிடெக் மாணவிகள் 3 பேர்  மீது கார் ஒன்று மோதியதால் 3 மாணவிகளும் தற்போது உயிருக்கு போராடி வருவதாக தெரிகிறது 
 
மூன்று மாணவிகளில் ஒருவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் மற்ற இருவரும் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின 
 
மாணவிகள் மீது காரை மோதி விட்டு தலைமறைவான குற்றவாளிகளை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வரும் மூன்று மாணவிகளுக்கும் சிகிச்சைக்கு மட்டும் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று அவரது அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்