25 ஆம் தேதி வரை மக்கள் வெளியில் வர முடியாது!

வியாழன், 15 செப்டம்பர் 2016 (07:33 IST)
காவிரி நீர் பிரச்னையால், கர்நாடகத்தில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன, மேலும் தமிழர்களின் உடைமைகளும் அடித்து நெருக்கப்பட்டன. 


 
பெங்களூரில் தான் அதிகபடியான கலவரங்கள் நடந்தது. அதனால், அங்கு 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இதை அடுத்து, படிப்படியாக வன்முறை சம்பவங்கள் குறைய துவங்கின. ஆனாலும் சில பகுதிகள் பதட்டமான சூழலில் இருந்தது. அதனால், 14ம் தேதி நள்ளிரவு வரை வதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு 25ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து பெங்களூரு சிட்டி போலீஸ் கமிஷ்னர் கூறியதாவது,”பெங்களூருவில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழாமல் இருக்க போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.'' என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்