ஆன்லைனில் மாடுகள் விற்பனை?

வியாழன், 1 ஜூன் 2017 (17:54 IST)
ஆன்லைனில் மாடுகளின் வகைகள் மற்றும் விலைகள் பட்டியலிட்டு மறுவிற்பனைக்காக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது. 


 

 
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்தும் டிஜிட்டலாக்கப்பட்டு வருவதால் இ-காமர்ஸ் வணிகம் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்மையில் மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் விற்பனை செய்யக்கூடாது என்ற புதிய சட்டத்தை அமல்படுத்தியது.
 
இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகம் மற்றும் கேரளாவில் அதிகளவில் எதிர்ப்புகள் கிளம்பியது. பல இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக மாட்டிறைச்சி திருவிழா நடத்தப்பட்டது.
 
ரியல் எஸ்டேட் தொடங்கி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்தும் இந்த OLX மற்றும் Quickr போன்றவற்றில் பெற்றுக் கொள்ளலாம். புதிய மற்றும் பயன்படுத்திய மறுவிற்பனை ஆகிய இரண்டும் இந்த தளத்தில் உண்டு. இந்நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து மடுகளை மறுவிற்பனை செய்ய ஆன்லைனில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என செய்தி வைரலாக பரவி வருகிறது.
 
இதுவரை அப்படி எந்த ஒரு விளம்பரமும் காணப்படவில்லை. இது உண்மையான தகவலா என்பது குறித்த சந்தேகம் உள்ளது. இருப்பினும் நெட்டிசன்கள் இந்த சேட்டையை செய்வதற்கு வாய்ப்புள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்