கோவாக்சின் 81 சதவீதம் செயல்திறன் கொண்டது… ஆய்வு முடிவுகள்!

வியாழன், 4 மார்ச் 2021 (09:30 IST)
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி 81 சதவீதம் செயல்திறன் கொண்டது என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

உலகெங்கும் உள்ள மருந்து நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருந்து வருகின்றன. சில நிறுவனங்கள் வெற்றிகரமாக கண்டுபிடித்தும் உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரசுக்கு கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்ததாக அறிவித்தது.

இந்த மருந்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது. ஆனால் மூன்றாம் கட்ட பரிசோதனை முடியும் முன்னரே ஒப்புதல் அளிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த தடுப்பூசி 81 சதவீதம் செயல்திறன் கொண்டதாக 3 ஆம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆய்வில் 18 முதல் 98 வரையிலான பல்வேறு வயது பிரிவினர், பல்வேறு இணை நோயுள்ளவர்கள் என பல தரப்பட்டவர்களிடம் கொடுத்து சோதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்