2-18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி போட அனுமதி?

செவ்வாய், 12 அக்டோபர் 2021 (14:31 IST)
கோவேக்சின் தடுப்பு மருந்தை குழந்தைகளுக்கு வழங்க இந்திய அரசின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல். 
 
2 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவேக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்த இந்திய அரசின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்தத் தேவையான தரவுகள் அனைத்தையும் இந்திய அரசிடம் அளித்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.
 
சைடஸ் காடில்லா நிறுவனத்தின் தடுப்பு மருந்தை 12 வயதுக்கும் மேலான குழந்தைகளுக்கு வழங்க ஏற்கனவே இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. கோவேக்சின் தடுப்பு மருந்துக்கும் அனுமதி வழங்கப்பட்டால், குழந்தைகளுக்கு செலுத்த அனுமதி வழங்கப்படும் இந்தியாவின் இரண்டாவது கொரோனா தடுப்பு மருந்தாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்