இந்த ராக்கெட்டில் விண்வெளி ஆய்வுக்காக இஸ்ரோ உருவாக்கியுள்ள ’ஆஸ்ட்ரோசாட், அமெரிக்காவின் 4 நானோ செயற்கைகோள்கள், இந்தோனேசியா, கனடா ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைகோள் என மொத்தம் 7 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி சி30 ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளன.
ராக்கெட்டில் ஒவ்வொரு கட்டமாக எரிபொருள் நிரப்பும் பணிகளும், எரியூட்டும் பணிகளும் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. நாளை விண்ணில் செலுத்தப்படும் 7 செயற்கைகோள்களில் இந்தியாவின் ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் பூமியில் இருந்து, 650 கி.மீ., உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இந்தியா சார்பில் அண்டவெளியில் நிலைநிறுத்தப்படும் ஆஸ்ச்ரோசாட்டின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். சூரிய சூரிய குடும்பத்தை அடுத்துள்ள விண்வெளி பகுதியை அறிந்து கொள்ளவும், எக்ஸ்-ரே கதிர்களின் மூலத்தை அறிந்து கொள்ளவும் இந்த செயற்கைகோள் உதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.