இளைஞர் ஒருவர் 1,500 பேருக்கு விருந்து வைத்ததால் கொரோனா தொற்று !

சனி, 4 ஏப்ரல் 2020 (21:21 IST)
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3072 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 213 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். 7பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர். தனதுய் தாயாரின் நினைவுநாளில் பங்கேற்பதற்காக கடந்த மார்ச் 17 ஆம் தேதி, தூபாயில் இருந்து ம.பியில் உள்ள மோரினாவுக்கு திரும்பியுள்ளார்.

அதன்பின், தனது தாயாரின் நினைவுநாளான 20 ஆம் தேதி 1500 பேருக்கு விருந்து வழங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி சுரேஷுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருடன் கடந்த 20 நாட்களாக அவர் யாருடன் தொடர்பு கொண்டார் என்பது குறித்து விசாரித்தபோது அவர் 1500 பேருடன் விருந்து உண்ணது தெரியவந்துள்ளது.

தற்போது 23 பேருக்கு நடந்த சோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இன்னும் விருந்தில் பங்கேற்ற  பலருக்கு சோதனை செய்தால் எண்ணிக்கை அதிகமாகலாமென அம்மாநில அரசு தெரிவித்துள்ளதாகதகவல்கள் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்