இந்தியாவுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்கு எச்சரிக்கை - WHO

புதன், 5 ஜனவரி 2022 (11:19 IST)
இந்தியாவில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரிக்கக்கூடும்  என WHO தெரிவித்துள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 29.54 கோடியாக அதிகரித்துள்ளது. 
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. சமீபகாலமாக 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 58,097 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,50,18,358 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கொரோனா பரவல் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு தகவல் அளித்துள்ளது. இந்தியா முதலான பல நாடுகளில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா பரவல் உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளது என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்