மோடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்

புதன், 3 ஜூன் 2015 (12:37 IST)
தேர்தல் செலவு கணக்கை காட்டாத பிரதமர் நரேந்திர மோடியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் சட்டபிரிவு செயலாளர் கே.சி.மிஸ்ரா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி ராஜேஷ்மிஸ்ரா ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒரு புகார் அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:-
 
நரேந்திர மோடி, வாரணாசி தொகுதி போட்டியிட்டார். அவ்வாறு போட்டியிட்ட அவர், தேர்தல் அலுவலகத்திற்கு 2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறியுள்ளார் ஆனால்,  அதனை தேர்தல் செலவுக் கணக்கில் காட்டவில்லை. மேலும், நரேந்திர மோடி தனது பயணச் செலவையும் கணக்கில் காட்டவில்லை.
 
எனவே, அவரை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், பிரதமர் பதவியில் இருந்தும் நரேந்திர மோடி நீக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்