கூட்டு வல்லுறவு செய்ததாக பொய் சொல்லிய பெண் தற்கொலை!

வியாழன், 25 பிப்ரவரி 2021 (08:16 IST)
தெலங்கானா மாநிலத்தில் தன்னை 6 பேர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்துவிட்டதாகப் பொய் கூறிய மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அந்த மாணவி படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி அவர் வீட்டுக்கு தாமதமாக வந்தபோது பெற்றோரிடம் தன்னை ஆட்டோவில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய்ததாகக் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியான பெற்றோர் காவல்துறையில் புகார் அளிக்க நடந்த விசாரணையில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் அந்த பெண் தாமதமாக வந்ததை மறைப்பதற்காக அப்படி பொய் சொல்லியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இப்போது அந்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மயங்கிய நிலையில் அவரை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்ற போது மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இது சம்மந்தமாக இப்போது விசாரணை நடந்து வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்