காபி கடை குளிர்சாதன பெட்டியில் கரப்பான்பூச்சி; புகைப்படம் எடுத்தவருக்கு அடி உதை

செவ்வாய், 28 மார்ச் 2017 (17:10 IST)
கபே காபி டே கடையின் குளிர்சாதன பெட்டியில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. இதை புகைப்படம் எடுத்த வாடிக்கையாளரை ஊழியர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் உள்ள புகழ்பெற்ற கபே காபி டே கடையில் இருக்கும் குளிர்சாதன பெட்டியில் கரப்பான் பூச்சி மற்றும் சில பூச்சிகள் காணப்பட்டுள்ளன. இதை அங்கு வந்த சட்டக்கல்லூரி மாணவர் அதனை தனது மொபைலில் படம் பிடித்துள்ளார். இதைக்கண்ட கடை ஊழியர் ஒருவர் அந்த மாணவரை அடித்துள்ளார்.
 
உடனே அந்த மாணவர் தனது மொபைலில் எடுத்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
பிரிட்ஜில் கரப்பான்பூச்சி மற்றும் சில பூச்சிகள் காணப்பட்டன. இதனை ஊழியர்களிடம் கூறியும் அவர்கள் அலட்சியமாக இருந்தனர். அந்த பிரிட்ஜை மெனு கார்டை வைத்து மறைத்தனர், என்று கூறினார்.  
 
மேலும் இதுகுறித்து கடை நிர்வாகம் கூறுகையில், இந்த சம்பவம் எங்களது கவனத்திற்கு வந்துள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்