மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த கும்பல், ஏழு நீதித்துறை அதிகாரிகளை ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக சிறைபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "மேற்கு வங்கம் மிகவும் மோசமான மாநிலமாக உள்ளது" என்று குறிப்பிட்ட அவர், நீதித்துறை அதிகாரிகளை அச்சுறுத்தும் இத்தகைய திட்டமிட்ட செயல்களை அனுமதிக்க முடியாது என்றார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து சிபிஐ அல்லது என்ஐஏ விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை தானே நேரடியாக கண்காணிக்கும் என்றும் அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் சட்டம் ஒழுங்கு தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கமளித்துள்ளார்.