இந்தியாவை கண்டு அஞ்சும் சீனா: இரகசிய அதிநவீன விமானம் அம்பலம்

சனி, 3 செப்டம்பர் 2016 (13:39 IST)
இந்தியா பிரம்மோஸ் ஏவுகனை பயன்படுத்தியதை அடுத்து சீனா இந்தியாவின் எல்லையில் அதன் இரகசிய அதிநவீன விமானத்தை நிறுத்தியுள்ளது.


இந்தியா பிரம்மோஸ் ஏவுகனையை பயன்படுத்தியதை தொடர்ந்து சீனா அதற்கு கண்டனம் தெரிவித்தது. அதுவும் இமாலய பகுதியில் இந்த பிரம்மோஸ் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து கிழக்கு அருணாசலப் பிரதேசத்தில் அருகில் உள்ள திபெத் விமான நிலையத்தில் சீனாவில் இரசிய அதிநவீன விமனாம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த அதிநவீன விமானத்தின் புகைப்படம் டுவிட்டர் மற்றும் இரண்டு ராணுவ இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சீனா இந்தியாவை எச்சரிப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்தியாவிடம் ‘ஸ்டீல்த்’ என்று பெயர் பெற்றுள்ள அதிநவீன விமானம் இல்லாததால், இத்தகைய தகவல்கள் பரவி வருகின்றன்.

இதையடுத்து இந்திய ராணுவம் சார்பில் கூறப்பட்டதாவது:-

எங்கள் நாட்டின் மீது அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு குறித்து எங்களுக்கு அக்கறை இருக்கிறது. இதைப்பற்றி யாரும் கவலைபட வேண்டாம், என்று தெரிவித்துள்ளது.

மேலும் பிரதமர் மோடி வியட்நாம் பயணத்தில் இந்த பிரம்மோஸ் ஏவுகனை பற்றி பேசவுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. அதோடு இந்தியா ரஷ்யாவிற்கு 3வது பிரம்மோஸ் ஏவுகனையை தாயரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்