ராஜஸ்தானில் நடந்த குழந்தைகள் திருமணம் : பரபரப்பு வீடியோ

வியாழன், 21 ஏப்ரல் 2016 (15:32 IST)
ராஜஸ்தானில் நடந்த குழந்தை திருமணம் வீடியோவாக வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

 
குழந்தைகள் திருமணத்திற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஆனாலும், வட மாநிலங்களில் அடிக்கடி குழந்தைகளை திருமணம் செய்யும் சடங்குகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
 
அதுபற்றிய வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில் ராஜஸ்தான் மாநிலம் கத்தோர்கர் நகரில் எராளமான குழந்தைகள் மணமகள் மற்றும் மணமகன் போல அலங்கரிக்கப்பட்டு அமர வைக்கப்படுகிறார்கள்.
 
அதிலும், ஐந்து வயது உள்ள ஒரு சிறுமியை 13 வயது சிறுவனுக்கு மணம் முடிக்கிறார்கள். அந்த சிறுமியோ அழுது கொண்டே இருக்கிறாள். இப்படி குழந்தைகளை கட்டாயப்படுத்தி திருமணம் வைக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த இரண்டு நாட்களில் அங்கு 6 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. தற்போது வீடியோ வெளியாகி உள்ளதால், இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்