முதல்வர் பதவியில் இருந்து விலக தயார் - உத்தவ் தாக்கரே

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (20:49 IST)
மஹாராஷ்டிர மாநிலத்தில்,சிவசேனா,  காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பதவியில் இருக்கும் நிலையில், சிவசேனாவில் சட்டசபைக் கட்சித் தலைவராக இருந்த ஏக் நாத் ஷிண்டே, 40 எம்.எல்.ஏக்களுடன் கவுகாத்தியில் தங்கியுள்ளார். இதனால் ஆளும் கட்சி ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், சிவசேனா, காங்கிரஸ்,  தேசிஉயவாதன் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தற்போது முக்கிய ஆலோசனையி ஈடுபட்டுள்ளனர்.

 அதில், காங்கிரஸ் மற்றும் தே., காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் உத்தரவ் தாக்கரேக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளனர். தற்போது இப்பிரச்சனைக்கு தீர்வுகாண, உத்தவ் தாக்கரே, ஷிண்டே உடன் போனில் பேசியுள்ளதாகவும், அவர், சிவசேனா தொண்டர்களாக நீடிப்பதாகவும்,பாஜகவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் அம் மாநில அரசியலில் பெரும் பதற்றம் நீடிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்