சத்தீஸ்கர் உயிரிழப்புகள்: கொடுக்கப்பட்ட மருந்தில் எலி நஞ்சு

ஞாயிறு, 23 நவம்பர் 2014 (19:02 IST)
அண்மையில் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னர் உயிரிழந்த 15 பெண்களுக்கும் கொடுக்கப்பட்ட மருந்துகளில் நச்சு இரசாயனம் கலந்திருந்ததாக சத்தீஸ்கரின் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
 
பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளில் ஸின்க் ஃபொஸ்பைட் என்ற நச்சு இரசாயனம் கலந்துள்ளமை பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாக சத்தீஸ்கர் மாநிலத்தின் சுகாதார அமைச்சர் அமார் அகர்வால் கூறியுள்ளார்.
 
இந்த இரசாயனம் எலி நஞ்சிலும் பயன்படுத்தப்படும் நச்சுப் பொருளாகும்.
 
இந்த மாதத்தின் ஆரம்பத்தில், அரசாங்கத்தின் இரண்டு சிகிச்சை முகாம்களில் அறுவை சிகிச்சைகளுக்கு உள்ளான 130 பெண்களில் 15 பேர் உயிரிழந்தனர்.
 
இந்த உயிரிழப்புகள் தொடர்பில், அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்துவரும் இரண்டு மருந்துத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்