நோயாளியின் படுக்கை மீது கால் வைத்து பேசிய ஐஏஎஸ் அதிகாரியால் சர்ச்சை

வியாழன், 5 மே 2016 (12:58 IST)
சத்தீஸ்கரில் அரசு மருத்துவமனைக்கு சென்ற பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி நோயாளியின் படுக்கை மீது கால் வைத்து பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

சத்தீஸ்கரின் ராமானுஜ் கஞ்ச் என்ற பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனைக்கு சென்ற ஐஏஎஸ் பயிற்சி பெற்றுவரும் அதிகாரி ஜெகதீஷ் சோன்கர் என்பவர் நோயாளிகளிடம் குறைகளை கேட்டார். அப்போது அந்த அதிகாரி தனது காலை நோயாளியின் படுக்கை கட்டில் மேல் வைத்து பேசினார். அந்த காட்சியை புகப்படம் எடுத்த சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அம்மாநில முதல்வர் ராமன் சிங் உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்