வலுக்கும் மூன்றாம் அணி – ராகுல், சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு !

Webdunia
புதன், 8 மே 2019 (10:47 IST)
மூன்றாம் அணி அமைப்பது தொடர்பாக சந்திப்புகள் உருவாகியுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான மெகாக் கூட்டணி அமையக் காரணமாக அமைந்தவர்களுள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஒருவர். மாநில முதல்வர்களை சந்தித்து பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் அணிதிரள வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார்.

அதேப் போல காங்கிரஸ் தலைமையிலான மெகாக் கூட்டணி அமைந்தது. ஸ்டாலின் , மம்தா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அவருக்கு ஆதரவு தந்தனர். தேர்தல் கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்றாம் அணி அமைக்கும் முனைப்பில் இருக்கிறார். இதற்காக பினராயி விஜயன் உள்ளிட்டோரை சந்தித்து வருகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அனுமதி கேட்க ஸ்டாலின் மறுத்துள்ளார்.

இதனால் மூன்றாவது அணி அமைய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படும் நிலையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். இது அரசியல் சூழலில் கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்