பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகரில், பாஜக 16 வாக்குகளையும், இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன. 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இறுதியில் ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமாரை தோற்கடித்து பாஜகவின் மனோஜ் சோங்கர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றம், மேயர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும் தேர்தல் பொறுப்பாளர்கள் 30ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது