உக்ரைனில் படித்த மாணவர்களை கைவிரித்த மத்திய அரசு: சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம்!

வியாழன், 15 செப்டம்பர் 2022 (18:14 IST)
உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர முடியாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உக்ரைன் மீது திடீரென ரஷ்யா திடீரென போர் தொடுத்ததை அடுத்து  உக்ரைனில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு நாடு திரும்பினார்கள். 
 
இந்த நிலையில் உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் கல்வி தொடர வழிவகை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது போரின் போது அந்நாட்டு மக்கள் அங்கேயே தான் இருக்கிறார்கள் ஆனால் நீங்கள் தான் உயிருக்கு பயந்து நாட்டுக்கு திரும்பி உள்ளீர்கள் என்று நீதிமன்றம் விமர்சனம் செய்தது 
 
இந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டப்படி வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவை படிப்பைத் தொடர முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. எனவே உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்களை மத்திய அரசு கைவிரிப்பு விட்டதாக கூறப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்