”முதலாளிகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மத்திய அரசு விமர்சிக்கிறது” - சீத்தாராம் யெச்சூரி

வியாழன், 13 ஆகஸ்ட் 2015 (12:14 IST)
மத்திய பாஜக அரசு எதிர்க் கட்சிகளை விமர்சிக்க நாட்டின் பெருமுதலாளிகள் மற்றும் ஊடகத்தை பயன்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டினர்.
 
நாடாளுமன்ற நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முடக்குவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாக நாட்டின் பெருமுதலாளிகள் கூட்டாக அறிக்கை விட்டிருந்தனர். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கக்கூடாது என்று அவர்கள் ‘அறிவுரை’ கூறியிருந்தனர்.
 
இதுகுறித்து புதனன்று மாநிலங்களவையில் பேசிய சீத்தாராம் யெச்சூரி, "ஊடகங்கள் மற்றும் பெருமுதலாளிகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மத்திய ஆளும் அரசு விமர்சிக்கிறது. நாடாளுமன்ற முடக்கத்திற்கு காரணம் எதிர்க்கட்சிகள் அல்ல, ஊழல் அமைச்சர்கள் குறித்து விவாதிக்க மறுத்த ஆளுங்கட்சி தான் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்