எதிர்ப்பையும் மீறி என்எல்சி பெயர் மாற்றம்

வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (16:20 IST)
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்ற பெயர் என்.எல்.சி இந்தியா லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

 
1956ம் ஆண்டு ஜம்புலிங்க முதலியார் என்பவரால் கொடுக்கப்பட்ட 600 ஏக்கர் நிலத்தில் நெய்வேலி என்எல்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
 
நாடு முழுவதும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் இருப்பதால் என்.எல்.சி என பொதுப்பெயர் சூட்டுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. இதற்கு தமிழகத்தில் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
 
தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி என்.எல்.சி நிறுவனத்தின் பெயரை, தற்போது என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்துள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
என்.எல்.சி.யில் மத்திய அரசுக்கு 90 சதவிகித பங்கும், தமிழக அரசுக்கு 5 சதவிகித பங்கும், தொழிலாளர்களுக்கு 5 சதவிகித பங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்