நேதாஜியின் ரகசிய ஆவணங்கள் மீண்டும் ரீலிஸ்

வியாழன், 26 மே 2016 (08:52 IST)
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த 25 ரகசிய ஆவணங்கள் நாளை மீண்டும் வெளியாகிறது.
 

 
இந்திய விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய மாபெரும் தலைவர் நேதாஜி, விமான விபத்தில் இறந்துவிட்டதகாவும், இந்தியாவிலேயே தலைமறைவாக வாழ்ந்து வருவதாக கூறி தொடர்ந்து மர்மம் நிலவி வருகிறது. இது குறித்து உண்மை அறிய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு கோரிகை விடுத்தன.
 
இந்நிலையில், பாஜக அரசு, நேதாஜி தொடர்பான 50 ரகசிய ஆவணங்களை ஏற்கனவே வெளியிட்டது. மேலும், 25 ஆவணங்கள் நாளை மீண்டும் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
மத்திய அரசின் இந்த அறிவிப்பு இந்தியாவைத் தாண்டி உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்