பிக் பஜாரை தொடர்ந்து ஐனாக்ஸ் தியேட்டர்களிலும் பணம் எடுக்கலாம்!!

ஞாயிறு, 27 நவம்பர் 2016 (10:42 IST)
பிக் பஜார் ஸ்டோர்களில் பணம் எடுக்கலாம் என்ற அறிவிப்பை தொடர்ந்து, அதே போன்று ஐனாக்ஸ் தியேட்டர்களிலும் பணம் எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


 
 
பணப் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால், அனைத்து பிக் பஜார் ஸ்டோர்களிலும் பொதுமக்கள் வங்கி டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.2000 வரை பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
 
இந்நிலையில், பொதுமக்கள் வங்கி டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஐனாக்ஸ் தியேட்டர்களில் ரூ.2000 வரை பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மும்பையில் உள்ள மூன்று இடங்களில் எற்கனவே இந்த சேவையை தொடங்கி விட்டது ஐனாக்ஸ் நிறுவனம். கூடிய விரைவில் மற்ற இடங்களிலும் இச்சேவையை தொடங்கவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்