மத்திய அரசின் 2020 – 2021 ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையை வாசித்து வருகிறார். நாட்டில் விவசாயம் மற்றும் விவசாயிகளிம் நலனுக்காக முன்னெடுக்கப்பட்ட பணிகள் குறித்து பேசிய நிதியமைத்தர் ஒளவையாரின் ஆத்திச்சூடியில் இருந்து “பூமி திருத்தி உண்” என்ற பகுதியை மேற்கொள் காட்டி, மூன்று வரிகளில் விவசாயத்தின் மகிமையை ஒளவையார் உணர்த்தியுள்ளதாக கூறினார்.
இதுத்தவிர விவசாயிகள் தாங்கள் விவசாயத்திற்கு செய்யும் செலவை விட விளைப்பொருட்களை மற்ற இடங்களுக்கு கொண்டு செல்வதற்காக அதிகம் செலவளிப்பதாக தெரிவித்திருந்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்துள்ள அரசு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்ல கிசான் ரயில் சேவை மற்றும் கிருதி உதான் விமான சேவை ஆகியவற்றை இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் விவசாயிகள் மற்றும் விவசாய மேம்பாட்டிற்காக 16 அம்ச திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.