பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா: கல்வி வாரியம் அதிரடி!!

சனி, 25 பிப்ரவரி 2017 (11:36 IST)
பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, ஜிபிஎஸ் கருவி மற்றும் வேகக் கட்டுப்பாட்டு சாதனங்கள் ஆகியவற்றை கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டும் என்று மத்திய பள்ளிக் கல்வி வாரியம் அறிவுறுத்தியுள்ளது.


 
 
உத்தரப் பிரதேச மாநிலம், இட்டா நகரில் கடந்த மாதம் பள்ளிப் பேருந்து ஒன்று சாலை விபத்தில் சிக்கியது. இதில் 12 மாணவர்கள் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.
 
இதையடுத்து, பள்ளி வாகனங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமராக்களும், வேகக் கட்டுப்பாட்டுக் கருவியும் பொருத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்