ரெயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு : நாடே ஸ்தம்பிக்கும் அபாயம்

புதன், 8 ஜூன் 2016 (08:22 IST)
36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 11ஆம் தேதி முதல் ரெயில்வே மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கம் அறிவித்து உள்ளது.


 

 
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதிய கமிஷனில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும், அடிப்படை சம்பளம் ரூ.26 ஆயிரம் என்று நிர்ணயிக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் தேசிய கூட்டுப் போராட்டக் குழு கடந்த ஏப்ரல் 11-ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தார்கள்.
 
ஆனால், தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த போராட்டத்தில் தபால், பாதுகாப்பு, வருமான வரி உட்பட 36 துறை மத்திய அரசு ஊழியர்கள் என 40 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இதனால் நாடே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜீலை 11 முதல் எந்த ரயிலும் ஓடாது. இதனால் பொருளாதார ரீதியில் அரசுக்கு பெரிய இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்