காவிரி வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

திங்கள், 2 நவம்பர் 2015 (17:38 IST)
காவிரி வழக்கு தொடர்பாக  பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 
 
சம்பா சாகுபடியை முன்னிட்டு செப்டம்பர் மாத இறுதி வரை  காவிரியில் இருந்து  45 டி.எம்.சி தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு   சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
சம்பா சாகுபடி பயிரைக் காப்பாற்ற உடனடியாக தண்ணீர் தேவைப்படுவதால், இந்த வழக்கை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. அப்போது வாதாடிய கர்நாடக அரசு வழக்கறிஞர்,  கர்நாடக அணைகளின் நீர்இருப்பு எவ்வளவு? அணைகளிலிருந்து எவ்வளவு நீர் திறந்துவிடப்படுகிறது உள்ளிட்டவை குறித்து தகவல் தெரிந்த பிறகே இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று வாதிட்டார்.
 
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீதான விசாரணை தீபாவளிப் பண்டிக்கைக்கு பிறகு நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக கர்நாடக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்