கடந்த 1948 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட காட்பரி இந்தியா நிறுவனம் Cadbury Dairy Milk, Bournville , 5-Star, Gems, Tang மற்றும் Oreo ஆகிய சாக்லெட், பிஸ்கட் வகைகளை தயாரித்து வருகின்றது.
இது தொடர்பாக காட்பரி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனு ஆனந்த் தெரிவிக்கையில், Mondelez International நிறுவனம் கடந்த 2010 ஆம் ஆண்டில் உலகளவிலான காட்பரி நிறுவனத்தைக் கையகப்படுத்தியபின் கடந்த ஆண்டு இறுதியில் மும்பை உப்பிட்டி பெட்டர் சாலையில் காட்பரி நிறுவனம் இயங்கிவரும் தலைமை அலுவலகமும் , போர்ன்வில்லே குடியிருப்புகளும் வைர வியாபாரியான திலிப் லக்கியிடம் 400 கோடிக்கு விற்கப்பட்டுள்ளன. இதில் தான் காட்பரி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் வசித்து வந்தனர்.