புதிய மின்சார கட்டண கொள்கை: அமைச்சரவை இன்று ஒப்புதல்

புதன், 20 ஜனவரி 2016 (19:14 IST)
புதிய மின்சார கட்டண நிர்ணயக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மின்சார கட்டண உயர்வுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


 
 
இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய மின்சார கட்டண நிர்ணயக் கொள்கைக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
 
மாநில மின்வினியோக நிறுவனங்களை திறம்பட நிர்வகிப்பதற்கு இக்கொள்கையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதத்திலும் இக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சரவை தெரிவித்துள்ளது
 
மின்னுற்பத்தி நிலையங்கள் 100 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் கிடைக்கும் காய்கறிகள் உள்ளிட்ட உயிரிக் கழிவுகளை பயன்படுத்திக் கொள்வதை ஊக்குவிப்பது போன்ற முக்கிய அம்சங்கள் இக்கொள்கையில் இடம்பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்