கேட்டைத் திறக்க தாமதப்படுத்திய காவலாளி மீது காரை ஏற்றிய தொழிலதிபர்

வெள்ளி, 30 ஜனவரி 2015 (12:31 IST)
கேரளாவில் கேட்டை திறக்க காலதாமதம் செய்த காவலாளி மீது காரை ஏற்றிய தொழிலதிபர் முகமது நிஜாம் கைது செய்யப்பட்டார்.
 
கேரளா மாநிலம் திருச்சூரில் பீடி தொழிலதிபர் முகமது நிஜாம். இவர் சம்பவத்தன்று, காவலாளி சந்திரபோஸ் கேட்டைத் திறக்க தாமதமாகி உள்ளது. முகமது நிஜாம் காவலாளி சந்திரபோஸை சித்திரவதை செய்துள்ளார். இதில் இருந்து தப்பிக்க சந்திரபோஸ் முயற்சி செய்துள்ளார்.
 

 
ஆனாலும் விடாமல் முகமது நிஜாம் காவலாளியை தனது ஹம்மர் காரை கொண்டு, சுவருடன் மோத செய்துள்ளார். தொடர்ந்து காவலாளியை கம்பியை கொண்டும் காவலாளி சந்திரபோஸை கொடூரமாக தாக்கியுள்ளார். 
 
அப்போது அருகிலிருந்த மற்ற காவலாளிகள் சந்திரபோஸை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் அவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இதனால் காவல் துறையினர் தொழிலதிபர் முகமது நிஜாமுக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து அவரை கைது செய்தனர். திருச்சூரில் தொழிலதிபர் முகமது நிஜாம் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளது.
 
தொழிலதிபர் முகமது நிஜாம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013ஆம் ஆண்டு தனது 9 வயது மகனை விலையுயர்ந்த காரை ஓட்ட செய்ததால், சிறார் நீதிமன்ற சட்டபடி குழந்தைகளை வதைசெய்யும் குற்றம், மற்றும் லைசன்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்ட செய்ய அனுமதி அளித்தல் ஆகிய குற்றங்களில் நிஜாம் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்