இந்தியாவில் செயல்படும் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல், சமீபத்தில் 4ஜி சேவையை நாடு முழுவதும் விரிவாக்கி வரும் நிலையில், அதன் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் 7 புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
இத்துடன், நிறுவனத்தின் செயல்பாட்டில் வேகத்தை கூட்டும் வகையில் பாதுகாப்பு, குறைந்த செலவினம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை மையமாக கொண்டு ஏழு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய சேவைகளில், ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க், பிஎஸ்என்எல் ஐபிடிவி, மொபைல் கனெக்டிவிட்டி, பைபர் டு தி ஹோம் பயனர்களுக்கான தேசிய Wi-Fi ரோமிங், அனுர்த்தமான தொடர்பாடல் சேவைகள், மற்றும் தனிப்பட்ட 5ஜி நெட்வொர்க் உட்பட 7 முக்கிய அம்சங்கள் அடங்கும்.
ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க் மூலம், பயனர்கள் மோசடி அழைப்புகள் மற்றும் செய்திகள் பெறாமல் பாதுகாப்பாக இருக்கலாம். மேலும், டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி மூலம், சாட்டிலைட் மற்றும் மொபைல் நெட்வொர்க் மூலம் தடையில்லா நெட்வொர்க் அனுபவத்தை பெறலாம் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.