4,147 கோடி ரூபாய் கருப்புப் பணம் வெளியீடு - மத்திய அரசு தகவல்

செவ்வாய், 6 அக்டோபர் 2015 (14:35 IST)
வெளிநாட்டில் உள்ள சட்டவிரோத சொத்துகளின் மதிப்பு ரூ.4 ஆயிரத்து 147 கோடியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று வருவாய் செயலாளர் ஹஸ்முக் அதியா கூறியுள்ளார்.
 

 
வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்த தகவலை அரசிடம் அளிக்க 90 நாட்கள் அவகாசத்தை மத்திய அரசு வழங்கி இருந்தது. அதன்படி அரசாங்கம் சேகரித்துள்ள தொகை ரூ.4,147 கோடி என வருவாய் செயலாளர் ஹஸ்முக் அதியா கூறியுள்ளார்.
 
கருப்புப் பணம் வைத்திருப்பது குறித்து கிடைத்துள்ள பிரமாண பத்திரங்களின் மொத்த எண்ணிக்கை 638 என்றும், வெளிநாட்டில் உள்ள சட்டவிரோத சொத்துகளின் மதிப்பு ரூ.4 ஆயிரத்து 147 கோடியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் அதியா கூறியுள்ளார்.
 
சட்டவிரோத வெளிநாட்டு பணம் வைத்திருப்போர் அது குறித்து தகவல் வெளியிட்ட பின் ரூ.3,770 கோடி கருப்பு பணம் பெறப்பட்டுள்ளது என கடந்த அக்டோபர் 1ஆம் தேதி அரசு அறிவித்தது. இது பெறப்பட்ட பணத்தின் முதற்கட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
 
சட்டவிரோத வெளிநாட்டு சொத்துகளை வைத்திருப்போர் அது குறித்து அரசிடம் அறிவிப்பதற்கு 90 நாள் வரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் இந்நடைமுறை முடிவுக்கு வந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்