குல்கர்னி மீது கறுப்பு பெயிண்ட் தாக்குதல்: எல்.கே. அத்வானி கடும் கண்டனம்

செவ்வாய், 13 அக்டோபர் 2015 (01:39 IST)
பாஜக மூத்த தலைவரும், பிரபல எழுத்தாளருமான சுதீந்திர குல்கர்னி மீது சிவசேனா கட்சியினர் கறுப்பு பெயிண்ட் ஊற்றி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பிரதமர் அலுவலக இயக்குனராக பணியாற்றியவரும், பிரபல எழுத்தாளருமான சுதீந்திர குல்கர்னி காலை நேரத்தில் தனது வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அவரை வழிமறித்த சிவசேனா தொண்டர்கள் சிலர், அவரது முகத்தின்மீது கருப்பு மையை ஊற்றி விட்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர்.
 
ஆனால், மனம்தளராத குல்கர்னி,  கருப்பு மையுடன் உள்ள தனது முகத்தை அப்படியே படம் பிடித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த தாக்குதலுக்கு சிவசேனா பெறுப்பேற்றுக் கொண்டது. ஆனால், இந்த தாக்குதலுக்கு அஞ்சப்போவதில்லை என குல்கர்னி பதிலடி கொடுத்தார்.
 
இந்த நிலையில், குல்கர்னி மீதான தாக்குதலுக்கு பாஜக மூத்த எல்.கே.அத்வானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்தை ஏற்றுக் கொள்ளும் சகிப்புத்தன்மை அனைவருக்கும் மிகவும் அவசியமானது என கருத்து தெரிவித்துள்ளார்.
 
அத்வானியின் இந்த கருத்தால் சிவசேனா கட்சி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்