காவலுக்கு பயந்து பாஜக தலைவர் தலைமறைவு

வெள்ளி, 22 ஜூலை 2016 (13:07 IST)
உத்தரபிரதேச மாநில பாரதீய ஜனதா கட்சி துணைத்தலைவர் தயாசங்கர் சிங், நிருபர்களை சந்தித்த போது அவர் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதியை சரமாரியாக சாடினார்.



கன்ஷிராம் கண்ட கனவுகளை மாயாவதி சுக்குநூறாக உடைத்துவிட்டார். உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் மாயாவதி டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறார். ஒரு கோடி ரூபாய்க்கு ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கிறார். யாராவது ரூ.2 கோடி தர முன் வந்தால் அவருக்கு டிக்கெட்டை வழங்குகிறார். பிறகு யாரேனும் ரூ.3 கோடி தர தயார் என்றால், அவருக்கு விற்று விடுவார் என்று கூறிய அவர் மாயாவதியை விலை மாதுவுடன் ஒப்பிட்டு பேசினார்.

மாயாவதி பற்றி அவர் கூறிய வார்த்தைகள் டெலிவிஷன் சானல்களில் வெளியாகியதை அடுத்த பலவேரூ தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இதனால் அவரை 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்து பா.ஜ.க. நடவடிக்கை எடுத்தது. அதைத் தொடர்ந்து தயாசங்கர் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

இதற்கிடையே தயாசங்கர் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அதை ஏற்று வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவரை போலீசார் தேடி வருகிறார்கள். ஆனால் தயாசங்கர் சிங் தலைமறைவாகி விட்டார். அவர் எங்கு சென்றார் என் பது மர்மமாக உள்ளது.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்