நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை கட்சியின் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.
இதனை அடுத்து வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் உருவாகக்கூடிய சூழல் குறித்தும், கட்சியின் முக்கய தலைவர்களான அத்வானி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்கு அளிக்கப்படவிருக்கும் பதவிகள் குறித்தும் ஆலோசிக்க பாஜகவின் மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நிதின் கட்கரி ஆகியோர் நரேந்திர மோடியை காந்திநகரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.