இன்று இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்படும் ஆதார் அட்டையை, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் என்பவர் கொண்டு வந்தார்.
ஆனால் ஆதார் அட்டை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய ஜெய்ராம் ரமேஷ், 'ஆதார் அட்டை என்பது முட்டாள்தனமானது என்று கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த ஆதார் திட்டமானது சமூக நலத்திட்டங்களின் பயன்களை பொதுமக்கள் பெறுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும், இதன்மூலம் சமூக நலத்திட்டங்களில் நடைபெறும் மோசடிகளை ஒழிக்க மட்டுமே திட்டமிட்டதாகவும் கூறினார்.
ஆனால் தற்போது அதே ஆதார் அட்டையை விமான பயணச்சீட்டுகள் பெற, வங்கிக் கணக்குகள் தொடங்க, போன் இணைப்புகள் பெற உள்பட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், இதனை தான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.