அசாம் மாநிலத்தில் முதன்முறையாக பாஜக ஆட்சி

ஞாயிறு, 22 மே 2016 (14:23 IST)
அசாம் மாநிலத்தில், பிஜேபி கூட்டணி 84 தொகுதியில் முன்னிலை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
 

 
அந்த மாநிலத்தில், மொத்தம் 126 தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதுபோல், பிஜேபி, அசோம் கண பரிஷத், போடோ மக்கள் ஃபிரன்ட் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக ஃப்ரன்ட், ராஷ்டிரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியாக போட்டியிட்டன. 126  தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே 84 தொகுதிகளில் பிஜேபி தலைமையிலான கூட்டணி முன்னிலை பெற்றது. இதனையடுத்து, பாஜக கூட்டணி அசாம் மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றுகிறது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்