கேரளாவில் பரவுகிறது பறவைக் காய்ச்சல் - லட்சக்கணக்கான கோழிகளை அழிக்க உத்தரவு

செவ்வாய், 25 நவம்பர் 2014 (19:25 IST)
கேராளாவில் பறவைக் காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருவதால் பண்ணைகளில் வளர்ந்து வரும் லட்சக்கணக்கான கோழிகளை அழிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
 
கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம், திட்டா மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் விரைந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பான கூட்டம் முதலமைச்சர்  உம்மன் சாண்டி தலைமையில் நடைபெற்றது. இதில் கால்நடைத் துறை மந்திரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
இக்கூட்டத்தில் பறவைக் காய்ச்சலை தடுப்பதற்காக, பண்ணைகள் மற்றும் வீடுகளில் வளர்த்து வரும் வாத்துகள், கோழிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கானப் பறவைகளை கொல்வதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு, இழப்பீட்டுத் தொகை வழங்கவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
 
மேலும், இப்பகுதிகளில் இருந்து இறைச்சிகள் மற்றும் முட்டைகளை ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் விரைவில் இப்பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்