17 நாட்களுக்குப் பின்னர் காணாமல் போன ரயில் கண்டுபிடிப்பு

சனி, 13 செப்டம்பர் 2014 (12:48 IST)
பீகார் மாநிலத்தில், காணாமல் போன பயணிகள் ரயில் ஒன்று 17 நாட்களுக்குப் பின், கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த மாதம் 25 ஆம் தேதி ஹாஜிபூர் ரயில் நிலையத்திற்கு அருகில், சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. இதனால் அந்த வழியாக வந்த மற்ற ரயில்கள், மாற்றுப் பாதைக்கு திருப்பி விடப்பட்டன.

இதனால் அவ்வழியே வந்த, கோரக்பூர் முசாபர் நகர் பயணிகள் ரயிலில் வந்த பயணிகள், ஹாஜிபூரில் இருந்து ரயில் வேறு பாதைக்கு மாற்றப்படுவதை அறிந்து, அங்கேயே இறங்கிவிட்டனர்.

பின்னர், அங்கிருந்து கிளம்பிய ரயில், முசாபர் நகருக்கு வரவில்லை. இதனால் காணாமல் போன பயணிகள் ரயிலை தீவிரமாகத் தேடும் பணி நடந்தது.

இறுதியில், சமஸ்டிபூர் ரயில்வே டிவிஷனில் ஒரு ரயில் நிலையத்தில் கோரக்பூர் பயணிகள் ரயில் அனாதையாக நின்று கொண்டிருப்பதாக கோரக்பூர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அந்த ரயிலின் ஓட்டுனரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, திருப்பி விடப்பட்ட பாதை எனக்கு புதிது என்பதால், நீண்ட நேரம் ரயிலை ஓட்டி வந்து கடைசியில் ஒரு ரயில் நிலையத்தில் நிறுத்தி விட்டேன். இது பற்றி இங்குள்ள அதிகாரிகளிடம் கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்