நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 40 தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், பீகார் தேர்தலில் நிதீஷ் குமாருக்கு ஆதரவாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட, நடிகர் சத்ருகன் சின்ஹா பெயர் பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது அரசியல் தலைவர்கள் பலரையும் வியக்கவைத்துள்ளது.