ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் அமளி

திங்கள், 5 அக்டோபர் 2015 (14:49 IST)
மாட்டுஇறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் நடத்திய கடும் அமளியால் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.


 
 
ஜம்மு காஷ்மீர் சட்டசபை அவைத் தலைவர் கோவிந்தர் குப்தா தலைமையில் இன்று காலை தொடங்கியது.  அப்போதுகாங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உறுப்பினர்கள் எழுந்து மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து விவாதிக்க அனுமதி கோரினர். 
 
ஆனால் இந்த விவாதத்திற்கு பேரவைத் தலைவர் அனுமதி வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து அவையின் மையப்பகுதிக்கு வந்த எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து அமளியில் ஈடுபடவே அவர்கள் அனைவரும் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்