பிரச்சாரம் செய்தது தப்புதான்: மன்னிப்பு கேட்டு வெளியேறிய வெளிநாட்டு நடிகர்கள்

செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (07:28 IST)
மேற்குவங்க மாநிலத்தில் பிரச்சாரம் செய்த இரண்டு வங்கதேச நடிகர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து இரண்டு நடிகர்களும் மன்னிப்பு கேட்டு உடனடியாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
 
மேற்குவங்கத்தின் எல்லையில் உள்ள வங்கதேசத்தின் பிரபல நடிகர்கள் பிர்தவுஸ் அஹமது மற்றும் காஜி அப்துல் நுார் ஆகிய இருவரும் மம்தாவின் திரிணாமுல் கட்சிக்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக பிரச்சாரம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய அரசு விசா விதிமுறைகளை இரண்டு நடிகர்களும் மீறிவிட்டதாக கூறி இருவரும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து இரண்டு நடிகர்களும் மன்னிப்பு கேட்டு வங்கதேசத்திற்கு திரும்பி சென்றனர்.
 
நடிகர்கள் பிர்தவுஸ் அஹமது மற்றும் காஜி அப்துல் நுார் ஆகிய இருவருக்கும் மேற்குவங்கத்தில் அதிக ரசிகர்கள் இருப்பதால், அந்த நடிகர்களை மம்தா கட்சியினர்கள் பிரச்சாரத்திற்கு அழைத்து வந்ததாகவும், விசா விதிமுறையை மீறிய இருவர் மீதும் கிரிமினல் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்