மரத்தில் தூக்கிலிடப்பட்ட சிறுமிகளின் ஆடைகளில் குற்றவாளிகளின் டிஎன்ஏ இல்லை

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (16:09 IST)
உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மரத்தில் சடலமாக தொங்கவிடப்பட்ட சிறுமிகளின் ஆடைகளில் குற்றம் சாற்றப்பட்டவர்களின் டிஎன்ஏ இல்லையென தகவல்கள் வெளியாகியுள்ளது.  
உத்தர பிரதேச மாநிலம் படானில் உறவுக்கார சிறுமிகள் இருவர் மரத்தில் தூக்கிலிடப்பட்டு சடலமாக மீட்கப்பட்டசம்பவத்தில், அவர்கள் இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு  கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
 
இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் ஆடைகளில் குற்றம் சாற்றப்பட்டவர்களின் டிஎன்ஏ இல்லை என தடயவியல் ஆய்வுத் துறை சி.பி.ஐ.யிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
 
சம்பவம் நடந்தவுடனே அந்த இடத்தில் இருந்து நிறைய ஆதாரங்களை எடுத்திருக்க முடியுமெனவும், காவல் துறையினர் அதனை செய்ய தவறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ஐதராபாத் தடயவியல் ஆய்வு மையம் அளித்துள்ள அறிக்கையில், கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் ஆடைகளில் குற்றம் சாற்றப்பட்டவர்களின் டிஎன்ஏ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்