பாபர் மசூதிக்காக போராடிய ஹஷிம் அன்சாரி மரணம்

புதன், 20 ஜூலை 2016 (13:58 IST)
பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மூத்த மனுதாரர் ஹஷிம் அன்சாரி(96) உடல் நலக் குறைவால் மரணமடைந்தார்.


 

 
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தில் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அன்று பாபர் மசூதி பாஜக அமைப்பினரால் இடிக்கப்பட்டது.
 
ஹஷிம் அன்சாரி உட்பட 7 மனுதாரர்கள் அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். 96 வயதான ஹஷிம் அன்சாரி உடல்நலக்குறைவால், லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
 
இன்று காலை காலமானார். மூத்த மனுதாரர்களில் ஒருவரான ஹஷிம் அன்சாரி பாபர் மசூதிக்காக அமைதியான முறையில் போராடி வந்தார். அண்மையில் பாபர் மசூதி பிரச்சனைக்கு தீர்வுகாண ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஹஷிம் அன்சாரியுடன் பேச்சுவர்த்தை நடத்தினர்.   
 
பேச்சுவார்த்தையில் இருதரப்பினருக்கும் பாதிப்பில்லாமல் முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியது. ஆனால் தீர்வு காணும் முன்னே ஹஷிம் அன்சாரியின் மரனம் கவலை அளிக்கிறது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்