பாபா ராம்தேவ் நிறுவனத்தின் 5 மருந்துகள் மீதான தடை நீக்கம்!

திங்கள், 14 நவம்பர் 2022 (11:44 IST)
சர்க்கரை நோய் உள்பட பாபா ராம்தேவ் நிறுவனத்தின் ஐந்து மருந்து பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
 
கேரளாவைச் சேர்ந்த கேவி பாபு என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் பாபா ராம்தேவ் தயாரித்த ஐந்து மருந்து பொருட்கள் மீது உத்தரகாண்ட் மாநிலம் தடை விதித்தது
 
சர்க்கரை நோய் மருந்து, ரத்த அழுத்த நோய் மருந்து, தைராய்டு சுரப்பி வீக்கம் மருந்து, கண் நீர் அழுத்த மருந்து மற்றும் உயர் கொழுப்புக்கு எதிரான மருந்து ஆகியவற்றுக்கு உத்தரகாண்ட் மாநில அரசு தடை விதித்திருந்தது
 
இந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரகதியில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்க வில்லை என்றும் கூறி தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாபா ராம்தேவின் நிறுவனம் வரவேற்றுள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்